[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

எம்.பி., மறைவையொட்டி நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

parliament-adjourns-tomorrow

நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி., ஈ.அகமது இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை நாடாளுமன்ற அவை ஒத்தி வைக்கப்படுகிறது.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி ஈ.அகமது அவர்களின் மறைவைத் தொடர்ந்து இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்யாமல் அவையை ஒத்தி வைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பினர். ஆனால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், நாளை அவை ஒத்தி வைக்கப்படும் என மக்களவை சபாநாயகர் சுமித்ராமகாஜன் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து அவையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத்தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எம்.பி ஈ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் டெல்லி ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத் துடிப்பு இல்லாத நிலையில், செயற்கை சுவாசம் அளித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஈ அகமது உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அகமதுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை அவை ஒத்தி வைக்கப்படுகிறது. இதனைதொடர்ந்து, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அவை மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close