JUST IN
 • BREAKING-NEWS 26ல் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம்
 • BREAKING-NEWS ராம்நாத் தாக்கல் செய்ய உள்ள வேட்பு மனுவில் ஓபிஎஸ் கையெழுத்திட்டுள்ளார்
 • BREAKING-NEWS 7 திமுக எம்எல்ஏ மீதான உரிமை மீறல் பிரச்னை விவகாரத்தில் இன்று அறிக்கை
 • BREAKING-NEWS ஜனாதிபதி தேர்தலை காங்கிரஸ் அரசியலாக மாற்றியுள்ளது: தமிழிசை
 • BREAKING-NEWS ராம்நாத்திற்கு அதிமுகவின் 2 அணிகளும் ஆதரவு தெரிவித்திருப்பது வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது: தமிழிசை
 • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து 1 லட்சம் முட்டைகள் உடைந்தன
 • BREAKING-NEWS மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் உள்ள 3 கடைகளில் தொடர் கொள்ளை
 • BREAKING-NEWS முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகள் இன்று மோதல்
 • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் இன்று வேட்புமனுத் தாக்கல்
 • BREAKING-NEWS அரசியலுக்கு வருவது பற்றி நலம்விரும்பிகளுடன் பேசியது உண்மைதான்- ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS 31 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்விசி-38 ராக்கெட்
 • BREAKING-NEWS வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாஜகவுக்கு அதிமுக ஆதரவு: ஸ்டாலின்
 • BREAKING-NEWS எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது
 • BREAKING-NEWS பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்ததால் டெல்லி பயணம்: ஓ.பன்னீர்செல்வம்
இந்தியா 19 Jan, 2017 01:01 PM

நல்லதே நடக்கும் பொறுமையாய் இருங்கள்: முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு விஷயத்தில் நல்லதே நடக்கும் என்றும் பொறுமையாக இருங்கள் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

பிரதமரை நேரடியாக சந்தித்த முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவசரச் சட்டம் இயற்றுமாறு கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்குவது குறித்து பேசுவதற்கு பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும் தமிழகத்தில் ஓராண்டு பெய்ய வேண்டிய இரண்டு பருவ மழையின் மூலம் கிடைக்க வேண்டிய மழையின் அளவு மிகக் குறைந்த அளவே நமக்கு கிடைத்தது. அதன் காரணமாக தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கிறது என்பதையும், தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வறட்சி நிலவுவதாகவும், வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 39,565 கோடி ரூபாய் கோரி மனு தயார் செய்யப்பட்டு மூன்று தினங்களுக்கு முன் தமிழக அரசு அதிகாரிகள் பிரதமர் அலுவலகத்தில் கொடுத்தனர். இதன் அடிப்படையில் இன்று காலை சந்திப்பதாக எனக்கு நேரம் ஒதுக்கித் தந்து நான் பிரதமரை சந்தித்தேன்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஜல்லிக்கட்டை, தமிழகத்தின் பாரம்பரிய உரிமையை, வீர விளையாட்டை நடத்த சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று நான் பிரதமரிடம் வலியுறுத்தினேன். ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன். பிரதமர் பரிவுடன் நமது கருத்தை கேட்டார். இந்தப் பிரச்னையில் தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன் என்றார்.

தமிழர்களின் உணர்வுகளை நான் முழுமையாக மதிக்கின்றேன். நன்றாகவே அறிந்திருக்கிறேன் என்று பிரதமர் கூறினார்.

மேலும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்கவில்லை எனவும் அதே சமயத்தில் மாநில அரசு இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

மாநில அரசின் நடவடிக்கை என்ன என்பது விரைவில் தெரியவரும். நன்மையே யாவும் நன்மையாய் முடியும்.

இவ்வாறு பன்னீர் செல்வம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பொறுமையாய் இருங்கள் நல்லதே நடக்கும் என்றார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தடியடி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த, தடியடி எங்கும் நடக்கவில்லை என்று பன்னீர் செல்வம் கூறினார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads