[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் புக் செய்யும் வசதியுடன் ஐஆர்சிடிசியின் புதிய செயலி

new-irctc-app-allows-booking-of-unreserved-tickets

பயணிகள் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் பதிவு செய்யும் வகையிலான புதிய ஐஆர்சிடிசி செயலியை ரயில்வேத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை பேடிஎம், மொபிக்விக் உள்ளிட்ட மொபைல் வேலட்டுகள் மூலமாக செலுத்தும் வசதியும் இந்த புதிய செயலியில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலியின் உதவியுடன் உபர் மற்றும் ஓலா உள்ளிட்ட நிறுவனங்களின் வாடகைக் கார்களையும் பயணிகள் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கனவே உள்ள வசதிகளுடன் இந்த புதிய வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடந்த புதிய செயலியின் அறிமுக விழாவில் பேசிய ரயில்வேத் துறை அமைச்சர், டிஜிட்டலை நோக்கி நகர்ந்துவரும் அடுத்த தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் இ-டிக்கெட்டிங் சேவைகள் வழங்க அதிக பாதுகாப்பு வசதிகளுடன் இந்த செயலி அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய செயலி மூலம் ரயில்வேக்கு விளம்பர வருவாயும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close