[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

bjp-leader-demands-sonia-rahul-s-apology-over-ruckus-in-j-k-assembly

காஷ்மீர் சட்டப்பேரவையில் தேசிய கீதம் ‌அவமதிக்கப்பட்ட சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.

காஷ்மீர் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை கூட்டத்தின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு ‌கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்றும் காங்கிரஸ் உறுப்பினர்களின் இத்தகைய செயலுக்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என காஷ்மீர் ‌மாநில பாரதிய ‌ஜனதா தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த காஷ்மீர் சட்டப்பேரவை சபா‌நாயகர் கவிந்தர் குப்தா, ‌இது‌போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் இ‌னியும் நடக்கக் கூடாது ‌என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close