[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

பெரு நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்யவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால்

aravindh-kejiriwal-blame-central-government

பெரு நிறுவனங்களின் 8 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குத்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப்பண ஒழிப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறுவதை ஏற்க முடியாது எனவும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதால் எந்த நன்மையும் ஏற்படவில்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் கருப்புப் பணமும் ஒழியவில்லை எனவும் மாறாக சாமானிய மக்களே பாதிக்கபட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் மல்லையா உள்ளிட்ட தொழிலதிபர்களின் வங்கிக் கடன்கள் ரூ.1.14 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள கெஜ்ரிவால் பெரு நிறுவனங்களின் வங்கிக் கடன்கள் ரூ.8 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு பதிலாக புதிய 500, 2,000 நோட்டுகள் வெளியிடப்படும் என மத்தய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சாமானிய மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close