[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

நாடாளுமன்ற அமளியால் ராஜினாமா செய்யத் தோன்றுகிறது... அத்வானி வேதனை

uproar-in-parliament-to-resign-if-the-pain-appears-advani

நாடாளுமன்றத்தில் நடைபெறும் தொடர் அமளிகளை பார்த்தால் எம்பி பதவியில் இருந்து ராஜினாமா செய்து விடலாம் என்று தோன்றுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்கே அத்வானி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பணமதிப்பிழப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, அலுவல்கள் ஏதும் நடைபெறாத நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி இர்திஷ் அலியிடம் அத்வானி தனது வேதனையைத் தெரிவித்துள்ளார்.

அத்வானியிடம் உங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது என இர்திஷ் அலி நலம் விசாரித்த போது, எனது உடல் நிலை ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது. நாடாளுமன்றம்தான் ஆரோக்கியமாக இல்லை என அத்வானி பதிலளித்திருக்கிறார். இந்தத் தகவலைச் செய்தியாளர்ளிடம் தெரிவித்த இர்திஷ் அலி, “நாட்டில் என்ன நடக்கிறது? இப்படி ஒரு நாடாளுமன்றத்தை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. இதை எல்லாம் பார்க்கும் போது எனது பதவியை ராஜினாமா செய்து விடலாம் போலிருக்கிறது” என அத்வானி தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

மக்களவை ஒத்திவைப்புக்குப் பின் அருகில் இருந்த எம்பிக்களிடம் பேசிய அத்வானி, முக்கியமான அம்சங்களில் யாருக்கு வெற்றி தோல்வி என்று பார்க்காமல் விவாதங்கள் ஆரோக்கியமானதாக நடைபெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதை நாடாளுமன்றத்தின் தோல்வியாகத்தான் கருத வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்றத்தை யார் முடக்குகிறார்கள் என்பதை நாடே அறிந்திருக்கிறது. நாடாளுமன்ற முடக்கம் மூத்த தலைவரான அத்வானியை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close