[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

டெல்லியில் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.3.25 கோடி பறிமுதல்

rs-3-25-crore-seized-in-delhi

டெல்லியில் பதுக்கி வைத்திருந்த ரூ.3.25 கோடி பணத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சிலரிடம் இருந்து 3 கோடியே 25 லட்சம் ரூபாய் பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித் துறை அதிகாரிகளும் டெல்லி காவல் துறை அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையில் இப்பணம் பிடிபட்டது. இந்தப் பணம் மும்பையை சேர்ந்த ஹவாலா தரகர் ஒருவருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. விமான நிலையங்களில் உள்ள ஸ்கேனர் கருவியில் சிக்காத அளவு நிபுணர்களின் உதவியுடன் இப்பணம் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Delhi india rs .3.25 crore seized
Advertisement:
Advertisement:
[X] Close