[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

ரூபாய் நோட்டு விவகாரம்.. மக்களவை டிசம்பர் 14 வரை ஒத்திவைப்பு

uproar-in-parliament-two-houses

ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை டிசம்பர் 14-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்தே ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடிய போது, ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 11.30 மணிக்கு அவை கூடிய போதும் அமளியை எதிர்க்கட்சிகள் கைவிடாததால் மக்களவை 12 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை மீண்டும் தொடங்கிய போதும் அமளி நீடித்ததால் மக்களவை டிசம்பர் 14-ஆம் தேதி அதாவது வருகின்ற புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக பாராளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கை மீறியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி பகவந்த் மானுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களில் அவரால் பங்கேற்க இயலாது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close