[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

மும்பையில் மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து: விசாரணையை தொடங்கியது காவல்துறை

fire-breaks-out-at-make-in-india-week-in-mumbai-brought-under-control

மும்மையில் மேக் இன் இந்தியா நிகழ்ச்சிக்கான மேடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.

தீ விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்குமோ என்ற பல்வேறு கோணங்களில் தீயணைப்பு படையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய தீயணைப்பு படை அதிகாரி ஒருவர், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், மேடை அலங்கரத்தால் தீ விபத்து ஏற்படவில்லை என்பது உறுதி என்றும் கூறினார். மேக் இன் இந்தியா வாரத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தபோது, மேடைக்கு ‌கீழே ப‌ற்றிய தீ, மளமளவென்று பரவியது. தீ‌ விபத்து குறித்து முதலமைச்சர் பட்நாவிசிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் விசாரித்தார்.

தீ விபத்து துரதிருஷ்டவசமானது என்று கூறிய முதலமைச்சர் பட்நாவிஸ், அதற்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இனி கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். திட்டமிட்டபடி மேக் இன் இந்தியா நிகழ்ச்சிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close