[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

தமிழக அரசுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயார்: ஜே.பி.நட்டா

we-are-in-regular-touch-with-apollo-hosp-tn-govt-natta

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவுடன் இணைய எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னை விரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மருத்துவர் கில்நானி உள்ளிட்ட 4 மருத்துவர்கள் கொண்ட குழு, அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இணைந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் விரைவாக குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார். இந்த விஷயத்தில் தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.

முதல்வர் உடல் நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை, தமிழக அரசிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறோம். முதலமைச்சருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உதவி தேவைப்படுவதாக அவர்கள் கூறினார். இதையடுத்து கில்நானி, தல்வார், நாரண், த்‌ரிக்கா ஆகிய எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சென்னை அனுப்பப்பட்டுள்ளனர். ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துகிறேன்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close