[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம்.. வருகிறது புதிய சட்டம்

handicap-discrimination-rs-5-lakh-fine-2-years-in-prison

மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வழி செய்யும் சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தக‌வலை மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலோட் தெரிவித்தார். இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதா மீதான விவாதம் வரு‌ம் திங்கள்கிழமை நடைபெறும் என்றும் அமைச்சர் கெலோட் தெரிவித்தார். அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கவும் இம்மசோதா வழி செய்கிறது. மேலும் தற்போது ஏழு வகை உடல் குறைபாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அதனை 21ஆக உயர்த்தவும் மசோதா வழி செய்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close