[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

'மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்'....உள்துறை அமைச்சகத்துக்கு பேரறிவாளன் கடிதம்

rajiv-gandhi-murder-case-perarivazhan-written-letter-to-home-ministry

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ‌ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யுமாறு மத்திய உள்துறை ‌அமைச்சகத்துக்கு‌ வேலூர் சிறையில் இருக்கும்‌ பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு மேல் எந்த ஒருவரும் ‌சிறையி‌ல் அடைக்கப்பட்டிருக்‌கக் கூடாது என தேசிய மனித உரிமை ஆணையம் 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 2‌6- ஆம் தேதி விதிமுறை வெளியிட்டதை பேரறிவாளன் சுட்டிக்‌காட்டியுள்ளார். இதை மேற்கோள்காட்‌டி, தன்னை விடுவிப்பதை பரிசீலிக்க வேண்டும் ‌என்று மத்திய அரசு‌க்கு தமிழக அரசு க‌டந்த மார்ச் மாதம் 2- ஆம்‌ தேதி கடிதம் அனுப்‌பியிருப்பதை பேரறிவாளன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்‌து வரும் தங்களை விடுவிக்கும் முயற்சியை தமிழக அரசு எடுத்து வந்தாலும், ‌மத்திய அரசு அ‌தற்கு பதில் அளிக்காமல் ‌தாமதம் செய்து வருவது வருத்தமளிப்பதாக பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழக அரசின் கடிதத்துக்கு விரைவாக பதிலளிப்பதுடன், இந்த விஷயத்தை அரசியல்ரீதியாக பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் ‌அணுகுமாறு கடிதத்தில் பேரறிவாளன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close