[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ரூபாய் நோட்டு விவகாரம்...10 நாட்களில் 160 டன் நோட்டுகளை விநியோகித்த விமானப்படை

air-force-has-airlifted-over-160-tonnes-of-banknotes-since-november-19

விமானப்படை சரக்கு விமானங்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி முதல் 160 டன் புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகள் திரும்பபெறப்படுவதாக பிரதமர் அறிவித்த பின்னர் நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ரிசர் வங்கி அச்சடித்த புதிய 2,000 மற்றும் 500 நோட்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சரிவரக் கிடைக்காத நிலை ஏற்பட்டது.இந்தநிலையில் புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டுசேர்ப்பதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கும் நோக்கில் விமானப்படையைச் சேர்ந்த ஏஎன்32, சி130 மற்றும் சி17 உள்ளிட்ட வகை சரக்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம் கடந்த 19ம் தேதி முதல் இதுவரை 160 டன் எடையுள்ள புதிய ரூபாய் நோட்டுகள் நாட்டின் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூபாய் நோட்டுகளைக் கொண்டுசெல்ல ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும்நிலையில், சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close