[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

’ஏழைகளுக்கான அரசு’... பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

in-emotional-speech-pm-modi-defends-currency-spike

ஏழைகளின் நலனுக்காகவே பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததாக பிரதமர் மோடி பேசினார்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் பாஜக எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, ஏழைகளின் நலனுக்காகவே பாஜக வென்று, ஆட்சியமைத்தது, மாறாக சொந்த நலனுக்காக அல்ல. கருப்புப்பணம் மற்றும் ஊழல் போன்றவைகளால் நாட்டிலுள்ள ஏழை, நடுத்தர மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு இந்த பிரச்னைகளுக்கு எதிரானது. இவைகளை அகற்ற மிகநீண்ட போராட்டத்தை நாம் முன்னெடுப்பதே நமது நோக்கம் என்று குறிப்பிட்டார். மேலும், அரசின் இந்த நடவடிக்கையால் கிடைக்கும் பலன்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் பாஜக எம்பிக்களை அவர் கேட்டுக் கொண்டார். இந்த தகவலை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close