[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

தெலங்கானா அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள்..!

3-354-government-schools-get-digital-classrooms

ஹைதராபாத்தில் உள்ள 3,354 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள 3,354 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகளை நேற்று அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் கடியம் ஸ்ரீஹரி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தரக ராம ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பஞ்சாரா மலைப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பேசிய கடியம் ஸ்ரீஹரி, தெலுங்கானா அரசு நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த இருப்பதாக கூறினார். இனி வரும் காலங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் இத்திட்டம் செயல் படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க இது ஒரு தொடக்கமாக இருக்கும் என்று விழாவில் கலந்து கொண்ட பெகாசிஸ்டம்ஸ் நிறுவன இயக்குனர் கூறியுள்ளார்.

இதன் மூலம் மாணவர்களுக்கு கற்றல் திறன் அதிகரிக்கும். வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்பிப்பதை அப்படியே டிஜிட்டல் வடிவில் கொடுப்பதால், மாணவர்கள் தங்களுக்கு தேவையான போது அவற்றை திரும்பவும் பயன்படுத்தமுடியும். வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் பட்சத்தில், இதுகுறித்த அனுபவம் ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close