[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

supreme-court-seeks-centre-s-affidavit-on-the-issue-on-pil-filed-by-various-petitioners-challenging

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்-கள் மூலம் மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பால், ஏழைய எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் எனவே இந்த அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.

மத்திய அரசின் கொள்ளை முடிவில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, பாதிப்பிலிருந்து மக்கள் மீள மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது என வினா எழுப்பிய உச்சநீதிமன்றம், வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close