[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

பழைய 500, 1000 ரூபாய் அவகாசம் நவ.24 வரை நீட்டிப்பு

old-500-1000-rupees-time-extension-until-nov-24

பெட்ரோல்‌ ப‌ங்க்குகள், சுங்க‌ச்சா‌வடிக‌ள், ரயில் ‌‌நிலையங்‌களில் பழைய ‌‌5‌00 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டு‌களை நவம்பர் 24ம் தேதி வரை செலுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்னை குறித்து மத்திய ‌அமைச்சர்கள்‌ மற்றும் முக்கிய அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார விவகார‌த் துறைச் செயலாளர் சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். குறிப்பிட்ட இடங்களில் பழைய ‌‌ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்‌‌கான அறிவிப்பு இன்று இரவுடன் காலாவதியாக‌ இருந்‌த நிலையில் அது மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதன் மூலம் மின்சார கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகள் உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் ஆக செலுத்தவும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி தொடர்பாளர்களின் பணக் கையிருப்பு வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு பணம் கிடைப்பது எளிதாகும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். நடப்புக் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் இருந்து எடுக்கவும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close