[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

சினிமா படப்பிடிப்பில் இரு நடிகர்கள் உயிரிழப்பு?

2-stuntman-dead-in-cinema-shooting

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், திரைப்படப் படப்பிடிப்பின் போது, 2 சண்டைப் பயிற்சி நடிகர்கள் நீரில் மூழ்கினர். அவர்கள் இருவரும் உயிரிழந்ததா‌க அஞ்சப்படுகிறது.

பெங்களூரு ‌அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் துனியா விஜய் நடித்து வரும் “மஸ்தி குடி” என்ற படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, விஜய் மற்றும் வில்லன்களாக நடித்த உதய் மற்றும் அனில் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.அதில் விஜய் மட்டும் நீந்திக் கரை சேர்ந்தார். அனில் மற்றும் உதய் ஆகியோர் நீரில் மூழ்கினர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரு நடிகர்களும் நீரில் மூழ்கி சில மணி நேரம் ஆகி விட்டதால், இருவரும் உயிரிழந்திருக்க‌லாம் என்று அஞ்சப்படுகிறது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் படப்பிடிப்பை நடத்தியதே நடிகர்கள் இருவர் நீரில் மூழ்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close