[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

வருகை பதிவை கண்காணிக்க 'ஆசிரியர் மாணவர்களுடன் செல்ஃபி'!

selfies-for-attendance-but-teachers-can-t-use-cellphones-in-school

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை, பதிவுகளை பதிவு செய்யவதற்கு மாணவர்களுடன் ஆசிரியர்கள் செல்ஃபி எடுத்து அவர்களின் ஆதார் எண்களையும் குறிப்பிட்டு ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் ஆன்லைனில் கல்வி துறைக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்று நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்திருந்தது.

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகை, பதிவுகளை கண்காணிக்கவும், சரியாக பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் கணக்கெடுப்பை தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் வருகை புரிந்த மாணவர்களின் ஆன்லைனில் கல்வி துறைக்கு தகவல் அனுப்ப வேண்டும் மேலும் ஓவ்வொரு மூன்றாவது திங்கள்கிழமை அன்றும் சரியாக பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களுடன் செல்ஃபி எடுத்து பள்ளி கல்வித்துறைக்கு தகவல்கள் அனுப்பப்பட வேண்டும் தெரிவித்திருந்தது.

பள்ளி கல்வி செயலாளர், நந்தகுமார் கூறுகையில், இந்த திட்டத்தின் மூலம் ஆசிரியர்கள் தவறாமல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை அடையாளம் காண உதவும் என்று தெரிவித்தார்.

இதற்கு முன், ஆசிரியர்கள் பள்ளிக்கு மொபைல் போன்கள் எடுத்து வரகூடாது என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை மறந்து தற்போது மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டது ஆசரியர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அனைத்து ஆசிரியர்களிடமும் ஸ்மார்ட்போன் இருக்காது. இந்த பிரச்னைகள் குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வினோத் தவேத்கு கடிதம் மூலம் தெரிவிக்க இருக்கின்றனர்.

மகாராஷ்டிரா அரசு மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தை பதிவு செய்ய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்தது குறிப்பிடதக்கது. மேலும் இந்த ஆப் தற்போது 10 மாவட்டங்களில் செயல்பெற்று வருகிறது எனவும், அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்று மதிய உணவு வருகை பதிவுகளை தெரிவிக்கவும், தரவுகளை பதிவு செய்யவும் மொபைல் ஆப் கொண்டுவந்ததுள்ளது குறிப்பிடதக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close