[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

சிறையிலிருந்து தப்பிய 8 சிமி பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

8-simi-terrorists-killed-in-madhya-pradesh

மத்‌திய பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையிலிருந்து தப்பி சென்ற சிமி பயங்கரவாதிகள் 8 பேரும் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

இவர்கள் தப்பிப்பதற்கு முன் சிறைக் காவலரையும் அவர்கள் கொன்றுள்ளனர். உணவு உண்ணும் தட்டை கூரிய ஆயுதம் போல் மாற்றி, அதைக்கொண்டு காவலரின் கழுத்தில் கைதிகள் குத்தியிருப்பதாக போபால் டிஐஜி ராமன் சிங் தெரிவித்தார். காவலரை கொன்ற கைதிகள் பின்னர் போர்வையை கயிறு போல் திரித்து அதைப்பயன்படுத்தி சுவர் ஏறிக் குதித்து தப்பியதாக அவர் கூறினார்.

தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்துவந்த நிலையில், போபால் புறநகர் பகுதியான இனந்த்கெடு கிராமத்தில் நடந்த என்கவுண்டரில் அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 8 பயங்கரவாதிகளில் ஜாகீர் உசேன், மெகபூப் ஆகிய 2 பேர் சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close