[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: பிரேசில் நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு

the-bilateral-relations-between-india-and-brazil-have-grown-for-the-better-pm-modi

இந்தியாவில் முதலீடு செய்ய பிரேசில் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரிக்ஸ் மாநாட்டிற்காக கோவா வந்த பிரேசில் அதிபர் மிக்சல் டிம்பரும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசினர். உறவுகளை மேம்படுத்துவது, வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து இரு நாட்டு பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பின்னர் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை அடுத்து பேசிய மோடி, அணுசக்தி விநியோக நாடுகளின் குழுமத்தில் இணைய வேண்டும் என்ற இந்தியாவின் உணர்வை புரிந்து கொண்டதற்கு பிரேசில் அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரேசிலின் ஆதரவு கிடைப்பதை வரவேற்பதாகவும் மோடி பேசினார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close