[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

சொந்தங்களுக்கு அரசு பணி கொடுத்ததாக புகார்: கேரளாவில் அமைச்சர் ராஜினாமா

kerala-industries-minister-jayarajan-resigns-over-nepotism-charges

கேரளாவில் அமைச்சர் ஜெயராஜன் தனது சொந்தக்காரர்களுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பதவிகள் வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் ஜெயராஜன் தொழில்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜன் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். மார்க்சிஸ்ட் கட்சியில் முக்கிய பிரமுகரான இவர், முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவர் ஆவார்.

அமைச்சர் ஜெயராஜன் தனது உறவினர்களுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஜெயராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் படி கட்சியின் கேரளத் தலைமைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் செயலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. ஜெயராஜன் தொடர்ந்து அமைச்சரவையில் இருக்கக் கூடாது என்ற கருத்து அப்போது முன் மொழியப்பட்டது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசின் அமைச்சரவையில் ஜெயராஜன் 4 மாதங்கள் மட்டுமே அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close