[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

தலாக் விவகாரம்.. கையெழுத்து வேட்டையில் முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்

angry-over-stand-on-triple-talaq-board-slams-govt

தலாக் முறைக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்க உள்ளது.

முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படும், மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் நடைமுறையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. ‘ஆண், பெண் பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ள தலாக் முறையானது, ஒரு மதத்துக்கு தேவையில்லாத நடைமுறை என, உச்சநீதிமன்றத்தில் அளித்த பதில் மனுவில், மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மேலும், அனைத்துக் குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை அறியும் முயற்சியிலும் சட்ட ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தலாக் முறைக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் நாடு முழுவதும் இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதனிடையே, பொது சிவில் சட்டம் கொண்டு வர முனையும் மத்திய அரசின் முடிவு நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும் இவ்வாரியம் கூறியுள்ளது.

இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு, இஸ்லாமிய மதத்தின் ஷரியத் விதிகளை உடைப்பது போன்றதாகும் என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் காலித் ரஷீத் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close