[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

இந்தியா வருகிறார் ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்

russian-pres-vladimir-putin-to-visit-goa-from-14-17-oct-to-attend-brics

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாடு 15 மற்றும் 16 ம் தேதிகளில் கோவாவில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில், பங்கேற்பதற்காக ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகிறார். வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் புதின் பங்கேற்கவுள்ளார். அதுமட்மின்றி இந்தியா - ரஷ்யா இடையிலான 17-வது வருடாந்திர மாநாட்டில் பிரதமர் மோடியுடன், விளாதிமிர் புதின் பங்கேற்கிறார்.

இதனிடையே பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் க்சி ஜின்பிங், வரும் 15-ஆம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பிரிக்ஸ் மாநாட்டில், அமைப்பில் இடம்பெறாத வங்காளதேசம், பூடான், நேபாளம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராக கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் இந்தியா வலியுறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close