இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்றும் நாளையும் ஆய்வு மேற்கொள்கிறார்.
உரி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் பயங்ரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தது. இதனயைடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் நிகழலாம் என்ற பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்லைப் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இன்றும் நாளையும் இந்த ஆய்வு நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடக்கும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பாகிஸ்தானை எல்லையாக கொண்ட 4 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ முகாம்களுக்கும் ராஜ்நாத் செல்ல உள்ளார். பாகிஸ்தானுடன் 3 ஆயிரத்து 323 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லையை இந்தியா கொண்டுள்ளது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?