[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்

மோசமான வானிலை: ஜி-சாட் 18 ஏவுகணை விண்ணில் செலுத்தப்படுவது ஒத்திவைப்பு

gsat-18-launch-deferred-by-24-hours-due-to-bad-weather

ராக்கெட் ஏவுதளத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஜி.சாட் - 18 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவது ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா ஏவுதளத்தில் இருந்து, ஏரியான் ராக்கெட் மூலமாக, ஜி.சாட் 18 செயற்கைக்கோள் நள்ளிரவில் ஏவப்படுவதாக இருந்தது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் , பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், மோசமான வானிலை ஏவுதளப் பகுதியில் நிலவுவதால், செயற்கைகோளை செலுத்துவது 24 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை அதிகாலை 2 மணியில் இருந்து 3 மணி 15 நிமிடங்களுக்குள் ஏரியான் ராக்கெட் மூலமாக செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 15 ஆண்டுகள் ஆயுட் காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள், தொலைத் தொடர்பு, பாதுகாப்புத்துறை என பலவற்றிக்கு பயன் தரும் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close