[X] Close
JUST IN
இந்தியா 04 Oct, 2016 08:00 PM

நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது ஜிசாட்-18 செயற்கைக்கோள்

india-s-latest-communication-satellite-gsat-18-to-be-launched-early-tomorrow

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோளான ஜி சாட்-18 நாளை விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை அதிகாலை 2 மணியிலிருந்து 3 மணி 15 நிமிடங்களுக்குள் ஏரியான் ராக்கெட் மூலம் ஜிசாட் -18 செயற்கைகோள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் பிரஞ்ச் கயானா சென்றுள்ளனர். 15 ஆண்டுகள் ஆயுட் காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் தொலைத் தொடர்பு துறையில் தொலைக்காட்சி நிகழ்வுகளை நேரலை செய்வது, பாதுகாப்புத்துறை என பலவற்றிக்கு பயன் தரும் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

Advertisement:
Advertisement:
[X] Close