[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

காவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

cauvery-case-today-hearing-in-supreme-court

காவிரி தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் தமிழகம், கர்நாடகா இடையே நடந்த முத்தரப்பு கூட்டத்தில் முடிவு எட்டப்படாத நிலையில், காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

காவிரியில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கில் கடந்த முறை 27-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது 3 நாட்களுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால், அதையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கர்நாடகா நிராகரித்து விட்டது. இருமாநிலங்களும், மத்திய அரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் மத்திய அமைச்சர் உமா பாரதி தலைமையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முடிவு எட்டப்படாத நிலையில், இனி உச்ச நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் உமா பாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close