[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழகத்திற்கு காவிரி நீர் தர கர்நாடகா மீண்டும் மறுப்பு

karanataka-refuses-to-release-water-to-tamil-nadu

தமிழகத்திற்கு காவிரி நீர் தர கர்நாடகா அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு விநாடிக்கு 6,000 கனஅடி வீதம் 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் கர்நாடக அரசிற்கு நேற்று உத்தரவிட்டது. மேலும் இந்த தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கிறதா என உச்சநீதிமன்றம் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு குறித்து ஆலோசிப்பதற்காக, கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் காவிரியில் தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, நீர் திறக்க கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தண்ணீர் திறப்பு குறித்து நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுடன் மத்திய அரசு நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close