[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் மீது ஷூ வீச்சு

shoe-hurled-at-rahul-gandhi-during-roadshow-in-uttar-pradesh-s-sitapur

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் மீது ஷூ வீசிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கும் குறிக்கோளுடன் காங்கிரஸ் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அந்த கட்சியின் துணைத்தலைவர் ராகுல், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக சீதாப்பூரில் ராகுல் காந்தி திறந்த வேனில் மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார். மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த ராகுல் மீது திடீரென ஒரு இளைஞர் மீது ஷூவை எறிந்தார். ஆனால் ஷூ அவர் மீது படவில்லை. உடனடியாக பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து அப்புறப்படுத்தினர். அந்த இளைஞரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close