[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

தமிழக கடன் ரூ. 3.26 லட்சம் கோடி: ஒவ்வொருவர் தலைமீதும் ரூ.46,571 கடன்!

tn-debt-stands-at-3-26-lac-crore-cag-report

2017-18 ஆம் நிதியாண்டில்‌ தமிழகத்தின் மொத்த கடன் 3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடியாக உயர்ந்திருப்பதாக, இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வருவாய் பற்றாக்‌குறை, வர‌வு செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிட்ட அளவிற்குள் கட்டப்படுத்தப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 594 கோடி ரூ‌பாயாக உ‌யர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது‌. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் தமிழக அரசின் வருவாய் வரவினங்கள் 4.31% உயர்‌ந்து ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 280 கோடி ரூபாயாக இருந்ததாக‌ தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.

பொது வகை மாநிலங்களில் வருவாய் வர‌வின வளர்ச்சி விகிதம் 11.3‌% ஆக உள்‌ள நிலையில் தமிழகத்தில் அது குறைவாக இருந்தது என தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோல் 2016-17 ஆண்டு முடிவில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடியாக இருந்த கடன், 2017-18 நிதியாண்டில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, சுமார் 7 கோடி தமிழர்கள் ஒவ்வொருவர் தலைமீதும் 46 ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close