[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

சரிவுடன் முடிந்த நிஃப்டி; சென்செக்ஸ் - எஸ் பேங்க் பெரும் வீழ்ச்சி

sensex-nifty-end-lower-yes-bank-plunges-30

இன்றைய வர்த்தக நேர இறுதியில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இரண்டுமே வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று இந்திய பங்குச் சந்தை மதிப்பீடான நிஃப்டி மற்றும் மும்பை பங்கு வர்த்தக மதிப்பீடான சென்செக்ஸ் இரண்டுமே ஏற்றத்துடன் காணப்பட்டது. ஆனால் அதன்பின்னர் படிப்படியாக இரண்டுமே வீழ்ச்சியடைந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்கு வர்த்தக மதிப்பீடான சென்செக்ஸ் 35.78 (00.9%) புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 39,031.55 புள்ளிகளில் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தை மதிப்பீடான நிஃப்டி 6.50 (0.06%) புள்ளிகள் சரிவடைந்து 11,748.15 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

இன்றை பங்கு வர்த்தகத்தில் எஸ் பேங்க் நிறுவனம் சென்செக்ஸில் அதிகபட்சமாக 30% சரிவை கண்டது. அதற்கு அடுத்த படியாக இண்டஸ்லேண்ட் பேங்க், ஹிரோமோடோ கார்ப், மாருதி சுசுகி, பவர்கிரிட் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக 5.21% சென்செக்ஸில் வீழ்ச்சி அடைந்தன. மொத்தத்தில் இன்றைய பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக வங்கிகள் மற்றும் மோட்டார் நிறுவனங்கள் இருந்தன. சீன உற்பத்தி பொருட்கள் பெரும் இழப்பை சந்தித்தன. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close