[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

கொட்டாங்குச்சி ஒன்றின் விலை ரூ.1365 ஹா..! - விமர்சிக்கும் நெட்டிசன்கள்

amazon-india-sells

தேங்காய் ஓடுகளில் செய்யப்பட்ட கைவண்ணப் பொருட்களை மெருகேற்றி நூற்றுக்கணக்கான ரூபாய் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் வரை இணைய வர்த்தக தளங்கள் விற்பனை செய்கின்றன.

நம் வீடுகளில் அன்றாடம் தேங்காய் என்பது ஏதேனும் ஒரு வகையில் பயன்படுகிறது. சமையலுக்கு, சாமி பூஜைக்கு என தினந்தோறும் அவற்றை பயன்படுத்தும் நாம், அவற்றின் ஓடுகளை குப்பைகளில் போடுகிறோம். கிராமப் புறங்களில் தேங்காய் ஓடுகளை அடுப்பெரிக்க பயன்படுத்துகின்றனர். 

Related image

அத்துடன் தேங்காய் ஓடுகளில் சக்கர வண்டி செய்து கிராம குழந்தைகள் விளையாடுவது வழக்கம். அதுவும் தற்போதைய காலத்தில் அரிதாகிவிட்டது. இந்த வகையில் வகையில் பார்த்தால் தேங்காய் ஓடுகளை பயன்படுத்துவதில் நகரங்களை விட, கிராமங்கள் பரவாயில்லை.

Related image

ஆனால் இணையதள விற்பனை தளங்களான அமேசான் உள்ளிட்டவை தேங்காய் ஓடுகளில் செய்யப்பட்ட பொருட்களை நூற்றுக்கணக்கான ரூபாய் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் வரை விற்பனை செய்கின்றன. இதை காணும் மக்களுக்கு,‘அட நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் ஓடுகளில் செய்யப்படும் பொருட்கள் இத்தனை ரூபாய்க்கு விற்பனையாகிறதா?’ என இணையதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதிலும் ரூ.3,000 மதிப்புள்ள தேங்காய் ஓடு கிண்ணம் தள்ளுபடி விலையில் ரூ.1,365 என்ற பதிவு வைரல் ஆகி வருகிறது.

Related image

ஆனால் அந்த ஒரு கிண்ணம் மட்டுமல்லாமல், பளபளப்பு செய்யப்பட்ட தேங்காய் கிண்ணங்கள், தேங்காய் ஓடு சிறு கரண்டிகள், ஐஸ்கிரீம் உண்ணும் தேங்காய் கிண்ணங்கள், காபி குடிக்கு தேங்காய் கப்புகள், தேங்காய் ஓடு சட்டை பொத்தான்கள், தேங்காய் ஓடில் செய்யப்பட்ட பெண்கள் முடிக் குத்திகள், தேங்காய் ஓடு கரண்டிகள் என பல வகைப் பொருட்கள் இணையதங்களில் விற்கப்படுகின்றன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close