[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

விரைவில் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம்..?

gst-slab-looking-at-single-standard-rate-between-12-and-18-per-cent

வருங்காலத்தில் 12 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம் ஆகிய இரு ஜிஎஸ்டி வரி விகிதங்களுக்கு பதிலாக இவ்விரு அளவுக்கும் இடையே புதிதாக ஒரு வரி விகிதம் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டியை பொறுத்தவரை 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் பேசிய பேசிய பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி விதிப்பில் 99 சதவீதப் பொருட்கள் 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரிவிதிப்பிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார். நாட்டு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார். அதன்படி அண்மையில் நடைபெற்ற 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்கள் மீதான வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜிஎஸ்டியால் வருவாய் அதிகரிக்கும் பட்சத்தில் வரி விகிதங்கள் தற்போதுள்ள 5, 12, 18 மற்றும் 28 என்ற அளவுகளில் இருந்து 5, 12-க்கும் 18-க்கும் இடைப்பட்ட அளவு மற்றும் 28 என குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் புதிதாக உருவாக்கப்படும் வரி பிரிவில் சேர்க்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மொத்தமுள்ள 1,216 பொருட்களில் 183 பொருட்களுக்கு வரி ஏதும் கிடையாது என ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். 308 பொருட்களுக்‌கு 5 சதவிகித வரியும், 178 பொருட்களுக்கு 12 சதவிகித வரியும் 517 பொருட்களுக்கு 18 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஏசி, சிமென்ட், ஆடம்பரம் மற்றும் புகையிலை பொருட்கள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெட்லி தெரிவித்திருக்கிறார். இதில் சிமென்ட்டை குறைந்த வரி பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெட்லி கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close