சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் நாட்டின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. இதுபோன்ற நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும், இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும் அவ்வப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன்கள், ஐபோன்கள், தொலைக்காட்சிகள், மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களின் மீது சலுகைகளை வழங்கியுள்ளது. மேலும், அமேசானின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்க்ளுசிவ் ஆஃபராக ஒரு டிவி வாங்கினால் ஒரு டிவி இலவசம் உள்ளிட்ட அதிரடி சலுகையையும் அறிவித்துள்ளது அமேசான். இந்த சலுகைகளை, இன்று முதல் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை பெற்று கொள்ளலாம் என அமேசான் அறிவித்துள்ளது.
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
என்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு
5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு