[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

வங்கியுடன் வங்கி சேர்ந்ததால் வருத்தத்தில் வாடிக்கையாளர்கள்

sbi-associates-bank-customers-sad

 

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் சேர்ந்ததால் அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வருத்தத்தில் உள்ளனர். எஸ்பிஐ விதித்திருக்கும் குறைந்த பட்ச இருப்புத் தொகை எனும் கட்டுப்பாடு, அதனுடன் சேர்ந்த பிற வங்கிகளுக்கும் வந்து விடும் என அதன் வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் எனும் உத்தரவு கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மெட்ரோ நகரம், புறநகப் பகுதி, நகரப் பகுதி, கிராமப் பகுதி என ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்ப குறைந்தபட்ச இருப்புத் தொகை மாறுபடுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்தநிலையில் பாரத ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கியனா ஸ்டேட் பேங்க் ஆப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கிகளும் கடந்த 1-ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டன.

இந்தத் துணை வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களுக்கு, எஸ்பிஐ விதிக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை கட்டாயமாக்கும் எனத் தெரிகிறது. வருகிற 24-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். வங்கியில் எங்கள் தேவைக்காக கணக்கு தொடங்குகிறோம். அதில் இருப்பு வைப்பதும், வைக்காதததும் எங்களின் விருப்பமே. அதில் குறைந்தப்பட்ச இருப்புத்தொகை வைக்காவிட்டால் அபராதம் என சொல்லவதெல்லாம் மிகப் பெரிய அநியாயம் என பல வாடிக்கையாளர்கள் தங்களது எதிர்ப்புக் குரலை உயர்த்த தொடங்கி விட்டனர்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close