[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

சைரஸ் மிஸ்த்ரி விவகாரம்...சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டும் டாடா குழுமம்

tata-sons-may-call-for-an-egm-to-remove-cyrus-mistry

டாடா குழுமத்தைச் சேர்ந்த டிசிஎஸ் நிறுவனம், தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்த்ரியை நீக்குவது தொடர்பாக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை டிசம்பர் 13-ல் கூட்டுகிறது.

நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்த்ரி கடந்த அக்டோபர் 24-ல் நீக்கப்பட்டார். இதையடுத்து டாடா குழுமத்தின் இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா பதவியேற்றுக்கொண்டார். மேலும், டாடா குழுமத்தின் முக்கியமான நிறுவனமாகக் கருதப்படும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்தும் சைரஸ் மிஸ்த்ரியை நீக்குவதாக அந்த குழுமம் சமீபத்தில் அறிவித்தது. இந்தசூழலில் டிசிஎஸ் நிறுவனத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் டாடா குழுமத்தின் பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. முக்கியமான இந்த இரு கூட்டங்களிலும் சைரஸ் மிஸ்த்ரி கலந்துகொள்ளவில்லை. டாடா குழுமத்தில் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ள பலூஞ்சி குடும்பத்தைச் சேர்ந்தவர் சைரஸ் மிஸ்த்ரி. அவரை டிசிஎஸ் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை வரும் டிசம்பர் 13ம் தேதி கூட்ட உள்ளதாக பங்குதாரர்களுக்கு அந்த நிறுவனம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close