[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

முற்றும் மோதல்...சைரஸ் மிஸ்திரி-ரத்தன் டாடாவிற்கு இடையே வார்த்தை போர்

tata-group-conflict-is-intensity

டாடா குழுமத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ‌சைரஸ் மிஸ்திரிக்கும் தற்போது தலைவர் பொறுப்பேற்றிருக்கும் ரத்தன் டாடாவிற்கும் இடையே வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.

நேற்று சைரஸ் மிஸ்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் டோகோமோ நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் டாடா சன்ஸ் நிறுவன நிர்வாகக் குழு மற்றும் ரத்தன் டாடாவின் ஒப்புதலுடனே செய்துகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் டாடா குழும ஊழியர்களுக்கு ரத்தன் டாடா எழுதிய கடிதத்தில் சைரஸ் மிஸ்திரியின் நீக்கம் நிறுவன வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக இருந்தது என தெரிவித்திருந்தார்.

நிர்வாகக் குழு தீவிர ஆலோசனைக்குப் பிறகே சைரஸ் மிஸ்திரியை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார். நிறுவனத்தின் நிலைத்தன்மைக்‌காகவே தாம் திரும்ப பொறுப்பேற்றிருப்பதாக கூறியுள்ள ரத்தன் டாடா, பதவி விலகும் முன்பாக டாடா குழுமத்திற்கு உலகத்தரம் வாய்ந்த தலைவர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close