[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

தொடங்கியது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு

all-set-for-crucial-bypoll-to-4-assembly-seats-in-tn

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

தகுதி நீக்கம், உறுப்பினர்கள் மறைவு காரணமாக தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்காக இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் 5 மாவட்டங்களில் 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

(கோப்புப்படம்)

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 37 பேர் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 297 வாக்குச்சாவடிகளில் 88 சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 15 பேர் போட்டியிடுகின்றனர். 2 லட்சத்து 33 ஆயிரத்து 874 வாக்கா‌ளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 257 வாக்குச்சாவடிகளில் , 70 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக்‌ கண்டறியப்பட்டு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ பயன்படுத்தப்படுகின்றன. அரவக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 250 வாக்குச்சாவடிகளில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. 

(கோப்புப்படம்)

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்காக, 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 15 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close