[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

மக்களவைத் தேர்தல்: சுஷ்மா சுவராஜ், அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களிப்பு!

minister-sushma-swaraj-delhi-cm-arvind-kejriwal-casts-their-vote

மக்களவை தேர்தலில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வாக்களித்தனர்.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்டங்களாக, 424 தொகு‌திகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில் 59 தொகுதிகளில் இன்று ஆறாவது கட்டத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் அதிக‌‌பட்சமாக 14 தொகு‌திகளில் தேர்தல் ‌நடைபெறுகிறது. ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும் டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பீகார், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் 968 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

 ஆறாம் கட்டத் தேர்தலுக்காக இந்த 7 மாநிலங்களிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெற விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு இன்று காலையில் தொடங்கியது. பொதுமக்கள் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

(அதிஷி)

கிழக்கு டெல்லி பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர், பழைய ராஜீந்தர் நகர் வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் சென்று காலையிலேயே வாக்களித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, குருகிராமில் உள்ள பின்கிரஸ்ட் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் புதுடெல்லி, என்பி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிவில் லைனில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி, ஜங்புரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close