[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

சில இடங்களில் வன்முறை - நிறைவடைந்தது 5ம் கட்ட மக்களவைத் தேர்தல்

fifth-phase-polls-ends-in-51-constituencies-in-7-states

7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் நடந்தப்பட்ட ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் 63.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

உ‌த்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களில் வாக்குப்பதிவு பெரிதும் அமைதி‌யான முறையில் நடைபெற்றது. எனினும் மேற்குவங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் சில இடங்களில் வன்முறை சம்பவங்க‌ள் நிகழ்ந்தன. பிற மாநிலங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. 

Image result for 5 phase election 2019

மேற்கு‌வங்க மாநிலம் பன்கான், ஹுக்ளி‌ மற்றும் பராக்பூர் பகுதிகளிலும்‌ ‌ஆங்காங்கே சிறிய அளவில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. BARRACKPORE என்ற பகுதியில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில், பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங்கை, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென தாக்கினர். மேலும் பொதுமக்களையும் வாக்களிக்கக் கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.‌இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த துணை ராணுவப் படை வீரர்கள் அர்ஜுன் சிங்கை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இதே போல் பீகாரின் சரண் தொகுதிக்குட்பட்ட சாப்ராவில், ஒரு வாக்குச்சாவடிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்த மின்னணு வாக்குச்சாவடியை அடித்து நொறுக்கி கீழே வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். ‌விசாரணையில் அவரது பெயர், ரஞ்சித் பஸ்வான் என தெரியவந்தது. ‌

Image result for 5 phase election 2019

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் ஐந்தாம் கட்டமாக 51 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 63.5 சதவீத வாக்குகள் பதிவானது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் களம் கண்ட உத்தரபிரதேசத்தில், 57.33% அதிகமான வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ராஜஸ்தானில் 63.78% வாக்குகளும், மத்திய பிரதேசத்தில் 66.31% வாக்குகளும்,பிகாரில் 57.86% வாக்குகளும், ஜார்கண்டில் 64.58% வாக்குகளும் பதிவாகியுள்ளன.  மேலும் 4 கட்ட மக்களவை தேர்தலைவிட, 5 கட்ட தேர்தலில் தான் குறைவான வாக்குப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close