[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

 “ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்” - பிரதமர் மோடி 

modi-said-i-hope-more-youngsters-head-to-the-polling-booths-and-vote

2-வது கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி 91 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் 18 மாநிலங்களிலும் 2 யூனியன் பிரதேசங்கலிலும் நடைபெற்றது.

இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத் தேர்தல் அசாம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிஸா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், வங்காளம்,சத்தீஸ்கர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மதுரையில் மட்டும் அழகர் திருவிழா நடைபெறுவதால் வாக்களிக்கும் நேரம் சற்று அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், 2-வது கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் “ மக்களவை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். அதிகமான இளைஞர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close