[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

தமிழகத்தில் 4 நாட்களில் 600 கோடிக்கு மேல் மது விற்பனை !

more-than-600-crore-liquor-sale-in-tamil-nadu-in-last-4-days-for-tn-election

தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் வழக்கத்தை விட அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், நேற்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நாளொன்றுக்கு 80 முதல் 90 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெறும். தேர்தல் நெருங்கிய நிலையில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Image result for tasmac

இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவலின்படி, கடந்த 15ஆம் தேதி இரவு முதல் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியதாகவும்  3 நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை போட்டிப் போட்டுக்கொண்டு மதுபிரியர்கள் வாங்கிச் சென்றதாக தெரிவித்தார். மேலும் நான்கு நாட்களில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 139 கோடி ரூபாய்க்கும், சென்னையில் 136 கோடி ரூபா‌ய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Image result for தமிழகத்தில் 4 நாட்களில் 600 கோடிக்கு மேல் மது விற்பனை

அடுத்ததாக, திருச்சியில் 133 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 120 கோடி ரூபாய்க்கும், கோவையில் 111 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன என்று தகவல் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் ரூ.639 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறி மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறதா என காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close