[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

’’அதிமுகவை முதுகில் குத்திய கட்டப்பா டிடிவி தினகரன்'': நடிகை விந்தியா

actress-vindhya-slams-ttv-dinakaran

அதிமுகவின் முதுகின் குத்திய கட்டப்பா டிடிவி தினகரன் என்று அதிமுக நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான விந்தியா தெரிவித்தார். 

தேர்தல் களம் இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில், பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியநாதன், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகில் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நட்சத்திர பேச்சாளரும், நடிகையுமான விந்தியா பேசினார். 

அவர் கூறும்போது, ‘’ ஜெயலலிதா இல்லையென்றால் எம்.ஜி.ஆரின் புகழ் மறைக்கப்பட்டு இருக்கும். ஜெயலலிதாவுடன் விசுவாசமாக இருந்த வர்கள் இப்போது முதல்வர்களாக இருக்கின்றனர். ஊழலின் மொத்த உருவமே திமுக தான். நீர், நிலம், காற்று என பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்த கட்சிதான் திமுக. மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது திமுக. ஜல்லிகட்டுக்கு தடை விதித்து திமுக. நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக. தமிழகத்துக்கு மதுவை கொண்டு வந்தது திமுக. உலகத்திலே அதிகமாக பொய் பேசியது டி.டி.வி. தினகரன். அவர் அதிமுகவை முதுகில் குத்திய கட்டப்பா’’ என்றார்.

அமைச்சர்கள் பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், எம்.எல்.ஏ பலராமன் உட்பட முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close