[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தேவாலயங்கள் மீது தாக்குதல் - ஆரம்பகட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணம் தெரிந்ததாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல்

மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

petition-seeking-cancellation-of-madurai-lok-sabha-election-dismissed-in-chennai-high-court

பணப்பட்டுவாடா நடைபெறுவதால் மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரை மக்களவைத் தொகுதியில் சௌராஸ்டிர முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதுடன், பரிசுப் பொருட்களையும் வழங்குவதாகவும், அதனால் இந்தத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியினரும் கோடிக்கணக்கில் செலவிடுவதாகவும், ஆனால் போலி கணக்கை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்வதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆணைய தரப்பு விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், பொது நலன் என்ற பெயரில் வழக்குத் தொடர்வதையே வாடிக்கையாகக் கொண்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் மனுதாரருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close