[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

வரும் 8-ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கை?

bjp-election-manifesto-on-april-8

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 8-ம் தேதி வெளியாகக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

17 ஆவது மக்களவைக்கான தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு 3 நாட்‌கள் முன்னதாக பாரதிய ஜனதாவின்
தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளதாக பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தல் அறிக்கையில், வளர்ச்சி, தேசியம் ஆகியவற்றிற்கு
முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

5 ஆண்டுகால ஆட்சியில் பாஜக வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதை அடுத்து, இந்த முறை வேலைவாய்ப்புகளை
உருவாக்க தனி அமைச்சகம், 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெறலாம் என தகவல்கள்
வெளியாகியுள்ளன.

மேலும் பாஜக அடிப்படை வாக்குகளை மனதில் வைத்து அயோத்தியா, காசி மற்றும் மதுரா போன்ற ஆன்மிக தலங்களுக்காக சிறப்பு மண்டலங்கள்
உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகலாம் என கூறப்படுகிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சி கடந்த 2-ஆம் தேதி தனது தேர்தல் அறிக்கையை
வெளியிட்டிருந்தது. ஏழைகளுக்கு ஆண்டுக்கு ‌72 ஆயிரம் ரூபாய் தருவது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அந்த அறிக்கையில்
இடம் பெற்றிருந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close