[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்
  • BREAKING-NEWS ஏப்ரல் 18ல் பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவு செய்ய வேண்டும் - கள்ளக்குறிச்சி வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து சேலம் உடையாப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
  • BREAKING-NEWS புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக மார்ச் 31ல் கமல்ஹாசன் பரப்புரை - மக்கள் நீதி மய்யம் மக்களவை தேர்தல் வேட்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன்

அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி:போயஸ்கார்டனில் இருந்து சரத்குமார் பேட்டி

sarathkumar-to-meet-jaya

அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைவதாகக் கூறிய சரத்குமார், முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க போயஸ்கார்டன் இல்லத்துக்கு சென்றுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால், நடிகர் சங்கத் தேர்தலின்போது தனக்கு அதிமுக ஆதரவு அளிக்காததால் சரத்குமார் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழகம் வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இடம்பெறும் என்று சரத்குமார் அறிவித்திருந்தார்.

மேலும், சமத்துவ மக்கள் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து பிரிந்த எர்ணாவூர் நாராயணன் சமத்துவ மக்கள் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, அதிமுகவுக்கு ஆதரவு என்றும் அறிவித்தார். இந்த நிலையில், புதிய திருப்பமாக, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்திக்க போயஸ்கார்டன் இல்லத்துக்கு சரத்குமார் சென்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைவதாக அறிவித்தார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close