[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ரிசார்ட்டில் உள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்களை சந்திக்க டிடிவி தினகரன் இன்று புதுச்சேரி செல்கிறார்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,309 கன அடியில் இருந்து 3,534 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனோகரன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
 • BREAKING-NEWS மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்
 • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு
 • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை: ரூ.71.37 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 60.06 காசுகளாகவும் உள்ளது
 • BREAKING-NEWS திருவாரூர்: மன்னார்குடியில் தனது ஆதரவாளர்களுடன் திவாகரன் ஆலோசனை
 • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனுக்கு உடல்நலக்குறைவு
 • BREAKING-NEWS அனைத்து அமைச்சர்களும் நாளை சென்னையில் இருக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
 • BREAKING-NEWS சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
 • BREAKING-NEWS நீட்தேர்வு விவகாரத்தில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
 • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
 • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தேர்தல் 03 Oct, 2016 05:53 PM

விநோதமான முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்து கவனம் ஈர்த்த வேட்பாளர்கள்

local-body-elections-candidates-who-filed-their-nomination-in-different-manner

மக்களின் மனங்களைக் கவர வாக்குறுதிகள் அளித்த காலம்போய், விநோதமான முறையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர் வேட்பாளர்கள்.

பிறப்பால் உயர்வு, தாழ்வு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக தேனி நகராட்சியில் 16ஆவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராகப்ரியா சின்னபாண்டி, திருநங்கைகள் புடைசூழ மனுத்தாக்கல் செய்தார்.

இதேபோல பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வாளி மற்றும் துடைப்பத்துடன் மனுத்தாக்கல் செய்ய சென்றார் தேனி, பெரியகுளம் நகராட்சி வார்டில் போட்டியிடும் சேதுராமன். இவரை வழி மறித்த காவல்துறையினர், வாளி மற்றும் துடைப்பத்தை அனுமதிக்க மறுத்தனர். இதனால் அதனை காவல்துறை கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு மனுத்தாக்கல் செய்தார் சேதுராமன்.

இதுஒருபுறம் என்றால், மாட்டு வண்டியில் சென்று நெல்லையில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் இந்து மக்கள் கட்சி வேட்பாளரான உடையார். இரு மாடுகளை பூட்டிக்கொண்டு பத்து பேரை அழைத்துக்கொண்டு அவர் சென்ற காட்சி ஊரையே திரும்பி பார்க்க வைத்தது. சென்னையில் பாரதிய ஜனதா சார்பில் சுப சித்ரா சதீஷ் என்ற பெண் வேட்பாளர் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வந்து மனுத்தாக்கல் செய்தார். ஊழலை ஒழிப்பதே தமது தாரக மந்திரம் என்று அவர் கூறினார். வேட்பாளர்களுக்கு இதுபோன்ற நுணுக்கங்கள் வெற்றியை கொடுக்குமா இல்லையா ? என்பதை தேர்தல் முடிவுகள்தான் பதிலை பெற்றுத்தரும்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close