[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு தொடங்கியது
  • BREAKING-NEWS எனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்

தமிழக உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

tn-local-body-election-tomorrow-last-date-for-nomination

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுக்கள் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

இந்நிலையில், உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 352 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று மட்டும் 21,018 பேர் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் இதுவரை 1,047 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், ஊராட்சி மன்ற தலைவருக்கு 40,872 பேரும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 209 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close