[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

நீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி ஹால்டிக்கெட்

neet-hall-ticket-will-be-released-on-april-15

நாடு முழுவதும் வரும் மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை வரும் 15ஆம் தேதி www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 

நீட் தேர்வு ‌முடிவுகள் வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி வெளியிடப்படும்.‌ தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close